என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியா- பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்கும் ஜெய் ஷா, மோசின் நக்வி, அமினுல் இஸ்லாம்
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி நாளை கொழும்பில் நடக்கிறது.
- ஜிம்பாப்வே- ஆஸ்திரேலியா போட்டி நடைபெற்ற ஆடுகளத்தில் நடக்க இருக்கிறது.
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நாளை இரவு நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் கொழும்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.
கொழும்பில் நாளை நடைபெறும் இந்த போட்டி குறித்து ரசிகர்களுக்கும் தற்போதில் இருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த போட்டியை பற்றி பேசத் தொடங்கியுள்ளனர்.
கொழும்பில் ஜிம்பாப்வே- ஆஸ்திரேலியா போட்டி நடைபெற்ற அதே ஆடுகளத்தில்தான் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என செய்திகள் கசிந்துள்ளன. மேலும், அங்கு மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆடுகளம் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.
இதற்கிடையே இந்த போட்டியை ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி, வங்கதேசம் கிரிக்கெட் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் நேரில் சென்று பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிம்பாப்வே- ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 169 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா 146 ரன்னில் சுருண்டது.






