என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் போட்டியை பொறுத்த வரையில் கம்பீருக்கு அழுத்தம்தான்: பவுமா சொல்கிறார்
    X

    டெஸ்ட் போட்டியை பொறுத்த வரையில் கம்பீருக்கு அழுத்தம்தான்: பவுமா சொல்கிறார்

    • டெஸ்ட் போட்டி என்று வரும்போது, இந்தியா மாற்றத்தின் பாதையில் இருக்கும் அணிதான்.
    • எதிர்காலத்தில் இந்தியாவுக்கு கடினமாக இருக்கப் போகிறது.

    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 எனக் கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை 2-1 எனவும், டி20 தொடரை 3-1 எனவும் இந்தியா கைப்பற்றியது.

    இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஒருநாள் கிரிக்கெட் ஓ.கே.தான். ஆனால், டெஸ்டில் அவருக்கு அழுத்தம்தான் என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பவுமா கூறியதாவது:-

    விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரண்டு நட்சத்திர வீரர்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி எப்படி விளையாடியது என்று நீங்கள் பார்த்தீர்கள். அதுவேளையில் டெஸ்ட் போட்டியில் அவர்கள் இல்லை. டெஸ்ட் போட்டி என்று வரும்போது, இந்தியா மாற்றத்தின் பாதையில் இருக்கும் அணிதான்.

    இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது தோளில் ஏராளமான அழுத்தத்தை கொண்டுள்ளார். அவர் அந்த அழுத்தத்தை சமாளித்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான அவகாசத்தை பெற்றுக்கொள்வதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். என்னுடைய பார்வையில் ஒயிட் பால் கிரிக்கெட் பெர்பார்மன்ஸ் அவருக்கு உதவியாக இருக்கலாம்.

    ஒருநாள் போட்டியில் ஆட்டத்திறன் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் வழக்கமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பொறுப்புகளை எடுத்துக் கொள்வார்கள். ஆகவே, கவுதம் கம்பீர் அவருடைய நிலையில் ஓ.கே. என நான் நினைக்கிறேன். எனினும், டெஸ்ட் கிரிக்கெட் பார்வையில், எதிர்காலத்தில் இந்தியாவுக்கு கடினமாக இருக்கப் போகிறது.

    இவ்வாறு பவுமா தெரிவித்தார்.

    Next Story
    ×