search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: 3 இந்திய வீரர்கள் முதல் சுற்றில் தோல்வி
    X

    சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: 3 இந்திய வீரர்கள் முதல் சுற்றில் தோல்வி

    • முதன்மை சுற்றின் ஒற்றையர் பிரிவில் விளையாட 4 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.
    • சுமித் நாகல் இங்கிலாந்தின் ரையான் பெனிஸ்டனை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதன் முதன்மை சுற்றின் ஒற்றையர் பிரிவில் விளையாட 4 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர். இதில் சுமித் நாகல் தவிர மற்ற 3 வீரர்களும் முதல் சுற்றிலேயே தோற்றனர்.

    ராம்குமார் ராமநாதன் 3-6, 6-7 (3-7) என்ற கணக்கில் டிமிட்டர் குஷ்மானோவிடமும் (பல்கேரியா), முகுந்த் சசிகுமார் 2-6, 2-6 என்ற கணக்கில் மேக்ஸ் புர்செலிடமும் (ஆஸ்திரேலியா), பிரஜ்னேஷ் குணேஷ் ரரன் 6-4, 3-6, 7-6 என்ற கணக்கில் ஜாய் கிளார்க்கிடமும் (இங்கிலாந்து) தோற்றனர்.

    சுமித் நாகல் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் இங்கிலாந்தின் ரையான் பெனிஸ்டனை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெறும் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்களான சுமித் நாகல்-முகுந்த் சசிகுமார், ஸ்ரீராம்-ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர்-அணிருத் சந்திர சேகர், விஷ்னு வர்தன்-ராம்குமார் ராமநாதன் ஆகிய 4 ஜோடிகள் விளையாடுகிறது.

    Next Story
    ×