செங்கோட்டை வழியே தாம்பரம் - கொல்லம் சிறப்பு கட்டண ரெயில் ஜூன் வரை இயக்கம்

செங்கோட்டை வழியே இயக்கப்பட்ட தாம்பரம் - கொல்லம் சிறப்பு கட்டண ரெயில் வரும் ஜூன் மாதம் வரை வாரம் இருமுறை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை வழியே தாம்பரம் - கொல்லம் சிறப்பு கட்டண ரெயில் ஜூன் வரை இயக்கம்
Published on

சென்னை:

செங்கோட்டை - புனலூர் அகல ரெயில்பாதை பணிகள் முடிந்துள்ள நிலையில் தாம்பரத்தில் இருந்து கொல்லம் வரை சிறப்பு கட்டண ரெயில் கடந்த மாதம் 30-ம் தேதி இயக்கப்பட்டது. மறுதினம் மறு மார்க்கமாக கொல்லத்தில் இருந்து தாம்பரத்திற்கு ரெயில் இயக்கப்பட்டது.

செங்கோட்டை வழியே இயக்கப்பட்ட இந்த ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வரும் ஜூன் மாதம் வரை வாரம் தோறும் திங்கள் மற்றும் புதன் கிழமையில் தாம்பரத்தில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் மாலை 5.30 மணிக்கு கொல்லத்திற்கு புறப்படுகிறது. மறுநாள் காலை கொல்லம் வந்தடைகிறது.

இதேபோல, செவ்வாய் மற்றும் வியாழன் கிழமை மதியம் 1 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை தாம்பரம் வந்தடைகிறது. இதற்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளதாக் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com