கோவையில் 9-ந் தேதி சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம்- ஸ்டெல்லா தினகரன் நற்செய்தி

பெதஸ்தா பிரார்த்தனை மையத்தில் 9-ந் தேதி சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஸ்டெல்லா தினகரன் கலந்து கொண்டு நற்செய்தி வழங்குகிறார்.
ஸ்டெல்லா தினகரன்
ஸ்டெல்லா தினகரன்
Published on

கோவை:

கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள காருண்யா நகரில் பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையம் இயங்கி வருகிறது. பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையம் எதிரில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் இயேசு அழைக்கிறார் நிறுவனர் டாக்டர். ஸ்டெல்லா தினகரன் கலந்து கொண்டு அருளுரை வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்கிறார். வாழ்வின் விஷேசித்த தேவைகளுக்காகவும், இந்த கல்வியாண்டில் அரசு தேர்வு எழுத ஆயத்தப்படும் மாணவ- மாணவிகளுக்காகவும் சிறப்பு கூட்டு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்படும். காருண்யா மாணவ- மாணவிகளின் சிறப்பு பாடல்களும் இடம் பெறும். இக் கூட்டத்தில் ஜாதி, மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வசதியாக பிரஸ்காலனி பஸ் நிறுத்தம், மேட்டுப்பாளையம் சிவரஞ்சனி தியேட்டர், மதுக்கரை மரப்பாலம், ஒண்டிப்புதூர் ஜோசப் பள்ளி, துடியலூர் பஸ் நிறுத்தம், சித்ரா பஸ் நிறுத்தம், சரவணம் பட்டி கஸ்தூரி சூப்பர் மார்க்கெட், கிணத்துக்கடவு டி.இ.எல்.சி ஆலயம், கணபதி ஜெபகோபுரம், சிங்காநல்லூர், கோவைப்புதூர் மற்றும் போத்தனூர் ஆகிய பகுதிகளிலிருந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து காருண்யா நகர் செல்வதற்கும் கூட்ட முடிவில் காந்திபுரம் செல்வதற்கும் அரசு பஸ் வசதிகள் அதிகாலையில் இருந்து இரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிற்றுண்டி சாலைகள், புத்தக சாலைகள், கூட்ட அரங்கிற்குள் இடம் பெறும். காருண்யா மாணவர் சேர்க்கை பற்றி அறிய ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com