திமுக எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார்- எஸ்.பி. கண்ணன் தகவல்

திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார் என செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன்
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன்
Published on

திருப்போரூர்:

திருப்போரூர் கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார். கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குமார் என்பவர் தனது பட்டா நிலத்தில் கால்வாய் அமைப்பதாக புகார் அளித்திருந்தார். வாய்தகராறு முற்றி இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் எம்எல்ஏவும், அவரது தந்தையும் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். கோஷ்டிமோதல் தொடர்பாக இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்போரூர் கோஷ்டி மோதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com