யானைகள் ரெயில்களில் அடிபடுவதை தடுக்க அதிகாரிகள் புது முயற்சி

காட்டுப்பகுதியில் அமைந்துள்ள தண்டவாளத்தை யானைகள் கடக்கும் போது ரெயில்கள் மோதி இறப்புக்குள்ளாவதை தடுக்க வடகிழக்கு ரெயில்வே அதிகாரிகள் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.
யானைகள் ரெயில்களில் அடிபடுவதை தடுக்க அதிகாரிகள் புது முயற்சி
Published on

கவுகாத்தி:

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் யானைகள் அடிக்கடி ரெயில் பாதையில் விபத்துக்குள்ளாகி இறக்கின்றன. இதனை தடுக்க வட கிழக்கு ரெயில்வே நிர்வாகம் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ஒலி பெருக்கி இணைக்கப்பட்டு அதில் தேனீக்களின் ஒலி பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ரெயில் வரும் சமயங்களில் அந்த ஒலி எழுப்பப்படும் போது யானைகள் எச்சரிக்கை அடைந்து பாதையை விட்டு விலகியோடும். இதனால் விபத்து தடுக்கப்படும். இவ்வொலி 600 மீட்டர் வரை பரவக்கூடியது. மேலும், இச்சாதனம் கடந்தாண்டில் ரங்கியா பகுதியின் கோல்பாராவில் பொருத்தப்பட்டது. இதன் பலனாக இந்த நாள் வரை அங்கு ஒரு யானை கூட இறக்கவில்லை.

இதனையடுத்து, இம்முறையை வடகிழக்கு ரெயில்வேக்கு உள்பட்ட யானைகள் கடக்கும் இடம் என கண்டறியப்பட்ட இடங்களில் முழுவதுமாக செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com