ஸ்மார்ட்ரான் எஸ்.ஆர்.டி.போன் மே 3-ந்தேதி வெளியாகிறது: ட்விட்டரில் டீசர் வெளியானது

ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் எஸ்.ஆர்.டி.போன் மே மாதம் 3-ந்தேதி வெளியாகும் என அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்துடன் டீசர் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்ரான் எஸ்.ஆர்.டி.போன் மே 3-ந்தேதி வெளியாகிறது: ட்விட்டரில் டீசர் வெளியானது
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட்போன் நிறுவனம் ஸ்மார்ட்ரான், மே 3-ந்தேதி புதிய எஸ்ஆர்.டி.போன் என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது. ட்விட்டரில் சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள டீசர் புகைப்படத்தில் மே 3-இல் ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் புதிய சாதனம் வெளியாகும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. 

ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் எஸ்.ஆர்.டி.போன் தான் சச்சின் டெண்டுல்கர் பிரான்டிங் கொண்ட முதல் சாதனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து விளம்பரம் செய்துள்ள போதும், ஸ்மார்ட்போனிற்கென ஸ்மார்ட்ரான் நிறுவனத்துடன் மட்டுமே இணைந்துள்ளார்.

ஸ்மார்ட்போன்களை விளம்பரம் செய்யும் வகையில் வாடிக்கையாளர்கள் புதிய சாதனத்தின் அறிமுக விழா நடைபெறும் மே 3-ந்தேதி சச்சின் டெண்டுல்கரை நேரடியாக சந்திக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வரை ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் எஸ்.ஆர்.டி.போன் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. 

ஸ்மார்ட்ரான் நிறுவனம் சார்பில் புதிய சாதனம் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், 'மாஸ்ட்ரி அட் தி கோர்' என்ற வார்த்தை மட்டும் இடம்பெற்றுள்ளது. இதனால் புதிய எஸ்.ஆர்.டி.போன் அதிக சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக ஸ்மார்ட்ரான் வெளியிட்ட ஸ்மார்ட்ரான் டி.போனில் (t.phone) AMOLED ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டது. இத்துடன் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஹைப்ரிட் லேப்டாப் ஒன்றும் வெளியிடப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com