ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு வழி செய்யப்படும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 2021-22ம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு குறுகிய கால (1 முதல் 6 மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டுப் பயிற்சி கட்டணமில்லாமல் நடைபெற உள்ளது.

தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ-மாணவிகள் தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப பயிற்சி மேற்கொள்ள தாட்கோவின் http://www.training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியை கட்டணமில்லாமல் பயிலலாம். 

பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு வழி செய்யப்படும். சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களுக்கு சுயமாக தொழில் தொடங்கிட http://www.application.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெறலாம். 

அரசு மானியம் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியத்தடன் கூடிய வங்கிக் கடன் வழங்க ஆவண செய்யப்படும். மேலும் தகவல்களுக்கு 0421-2971112, 9445029552 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் tprdmtahdco@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com