

திஸ்ப்பூர்:
அசாம் மாநிலம் பார்பெட்டா மாவட்டத்தில் உள்ள எஃப்.ஏ.ஏ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக பிறந்த 6 குழந்தைகள் மரணமடைந்துள்ளன. இதற்கு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாததுதான் காரணம் என கூறப்பட்டது.
இந்த மருத்துவமனையின் முதல்வர், குழந்தைகள் மரணத்திற்கு பிறக்கும்போது ஏற்பட்ட சிக்கலே காரணம். இதற்கு மருத்துவர்கள் பொறுப்பாக மாட்டார்கள் எனக் கூறினார்.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹிமானந்தா பிஸ்வா ஷர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘குழந்தைகள் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததாகும். பிறக்கும்போது ஏற்பட்ட சிக்கல்களே மரணத்திற்கு காரணம்’’ என தெரிவித்தார். குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறந்த குழந்தைகள் பிறக்கும்போது எடைக் குறைவாக இருந்துள்ளன.
மேலும், பார்பெட்டா மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் அதிகமாக உள்ளது. மருத்துவமனைகளில் குழந்தை மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக ஹிமானந்தா தெரிவித்தார்.