உ.பி. சாலை விபத்து- திருமண விழாவிற்கு சென்ற 6 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமண விழாவிற்குச் சென்றவர்களின் கார் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்து
விபத்து
Published on

பஹ்ரைச்:

உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் தனாவ்லி அருகே நேற்று இரவு சொகுசு கார் மீது, லாரி மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. அதில் பயணித்தவர்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றி மாவட்ட எஸ்பி கூறும்போது, திருமண விழாவிற்காக சொகுசு காரில் சென்றவர்கள் மீது லாரி மோதியதாகவும், லாரி கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். தப்பி ஒடிய டிரைவரை தேடி வருவதாகவும் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com