சிறுமுகை அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு

சிறுமுகை அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்துள்ள திம்மராயம் பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்தகோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு இரவு 11 மணியளவில் கிருஷ்ணன் என்பவர் கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் காலை 7 மணிக்கு அவர் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்து.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. மர்மநபர்கள் சிலர் கோவிலுக்கு புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com