பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதி வாய்ப்பை இழந்தார், ஹாலெப்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்விடோலினாவிடம் நேர் செட்டில் தோல்வி அடைந்த நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் அரைஇறுதி வாய்ப்பை இழந்தார்.
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதி வாய்ப்பை இழந்தார், ஹாலெப்
Published on

டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ரெட்’ பிரிவில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. ஒரு ஆட்டத்தில் அறிமுக வீராங்கனை கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 2 மணி 18 நிமிடங்கள் போராடி 0-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை (டென்மார்க்) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்கிய ‘நம்பர் ஒன் புயல்’ சிமோனா ஹாலெப் (ருமேனியா) 3-6, 4-6 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவிடம் (உக்ரைன்) மண்ணை கவ்வினார். லீக் முடிவில் இந்த பிரிவில் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்த வோஸ்னியாக்கி, கரோலின் கார்சியா ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.

தலா ஒரு வெற்றி, 2 தோல்வியை கண்ட ஹாலெப், ஸ்விடோலினா போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து 3-வது ஆண்டாக ஹாலெப் முதல் சுற்றுடன் நடையை கட்டியுள்ளார்.

                                           தோல்வி ஏமாற்றத்தில் ஹாலெப்

இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு)- வோஸ்னியாக்கி (டென்மார்க்), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)- கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் மோதுகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com