ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியது

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் போராட்டம் தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இன்று தொடங்கியது. #Sterlite
தூத்துக்குடியில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட காட்சி.
தூத்துக்குடியில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட காட்சி.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், அந்த ஆலையின் விரிவாக்க பணியை தடை செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் போராட்டம் தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இன்று தொடங்கியது. தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயரும், மகளிர் அணி செயலாளருமான அந்தோணி கிரேஸ், நிர்வாகி கள் எட்வின் பாண்டியன், பாலன், அசோக்குமார், கோட்டாள முத்து, 3-ம் மைல் செல்வகுமார், பிரபாகரன், தங்கத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Sterlite #tmailnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com