சோழவரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

சோழவரம் அருகே வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை
கொலை
Published on

செங்குன்றம்:

சோழவரம் அருகே உள்ள காரனோடை சண்முகா நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் ராஜேஷ் என்கிற குள்ள ராஜேஷ் (வயது 24).

நேற்று இரவு வீட்டில் இருந்த வெளியே சென்ற ராஜேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 11.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள காலி மைதானத்தில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ராஜேஷ் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜேசை மீட்டு சிகிசசைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

கொலையுண்ட ராஜேஷ் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக அவரை எதிர் தரப்பினர் தீர்த்துகட்டினரா? அல்லது வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com