சோழவரம் அருகே சிகரெட் குடோனில் தீ விபத்து

சோழவரம் அருகே சிகரெட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிகரெட் குடோன் தீ விபத்து
சிகரெட் குடோன் தீ விபத்து
Published on

செங்குன்றம்:

சோழவரம் அருகே பண்டிகாவனூர் கிராமம் உள்ளது.

இங்கு கடந்த 5 ஆண்டுகளாக சிகரெட் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சிகரெட் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. காவலாளிகள் இரவு- பகலாக இந்த குடோனை பாதுகாத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குடோனின் ஒரு பகுதியில் புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு காவலாளிகள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வண்டிகள் வந்தன. 64 தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com