மும்பையில் கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்

மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் பல்வேறு சாலைகளில் வெள்ளத்தில் மூழ்கின.
சாலைகளில் வெள்ளம்
சாலைகளில் வெள்ளம்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த இரு தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க போலீசார் எச்சரித்து இருந்தனர்.

இந்நிலையில், மும்பையில் அதிகாலை முதலே பலத்த மழை பெய்தது. விடாமல் பெய்த மழையால் மும்பையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com