

புதுடெல்லி:
சர்வதேச மூலதன வணிகத்தினை தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் தொடங்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பானது, பல்வேறு நாடுகளுக்கு இடையே உள்ள வணிகத்தை ஒழுங்குமுறைப்படுத்திகிறது. இந்நிலையில், வணிக ஒப்பந்தங்களில் சுந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்களை ஈடுபடுத்தும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபெர்டோ அஸீவேடோ, இந்திய வர்த்தக துறை மந்திரி சுரேஷ் பிரபு, நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட 7 நாடுகளின் வர்த்தக மந்திரிகள் பங்கேற்றனர். ஆப்ரிக்க நாடுகள் உள்பட 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடியை சந்தித்த ராபெர்டோ அஸீவேடோ
இந்த கூட்டத்தில், வணிக ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபெர்டோ அஸீவேடோ பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.#WTODelhi2018 #TamilNews