செங்கிப்பட்டி அரூகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

செங்கிப்பட்டி அரூகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கிப்பட்டி அரூகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை
Published on

பூதலூர்:

செங்கிப்பட்டியை அடுத்த கொசுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாய தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது29). கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மன முடைந்த பிரியா வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பயனின்றி அவர் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com