செங்கிப்பட்டி அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்

செங்கிப்பட்டி அருகே கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

வல்லம்:

புதுக்கோட்டை மாவட்டம் சைவவெள்ள பிள்ளையார் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருச்சி-தஞ்சை சாலையில் சென்றார்.

புதுக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் சுரேஷ் மீது மோதியது. மேலும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தஞ்சையை அடுத்த நடுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 60) என்பவர் மீதும் மோதி விட்டு கார் நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் சுரேஷ், கலியமூர்த்தி இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com