செங்கிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்

செங்கிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவரின் மனைவி மியூசி (வயது 29). இவர் வீட்டின் அருகே உள்ள தெருவில் குடத்தில் தண்ணீர் பிடித்து கொண்டு வரும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது வேகமாக மோதியது.

இதில் நிலைதடுமாறி தண்ணீர் குடத்துடன் சாலையில் விழுந்த மியூசி படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com