செங்கிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி

செங்கிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்த பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிமாணிக்கம் (வயது 45). இவர் செங்கிப்பட்டியை அடுத்துள்ள வளம்பக் குடியில் தனியார் தொழிற் சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை சைக்கிளில் வேலைக்கு தஞ்சை-திருச்சி சாலையில் வளம்பக்குடி அருகே சென்றார். அதே சாலையில் தஞ்சை களிமேடு பகுதியை சேர்ந்த ஜீவன்ராஜ் (50) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது பழனி மாணிக்கத்தின் மீது மோதியுள்ளார்.

இதில் இருவரும் கீழே விழுந்து படுகாய மடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். ஜீவன்ராஜீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com