பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இரவு இந்தியா வந்தடைந்தன.
இந்தியா வந்தடைந்த ரபேல் போர் விமானங்கள்
இந்தியா வந்தடைந்த ரபேல் போர் விமானங்கள்
Published on

புதுடெல்லி:

நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நிறுவனம் முதல் தவணையாக ஐந்து விமானங்களை வழங்கியது. இந்த விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. அந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டதோடு, லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பிற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில் பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ரபேல் ஜெட் போர் விமானங்கள் பிரான்ஸிலிருந்து இன்று காலை புறப்பட்டு எங்கேயும் நிற்காமல் இன்று இரவு 8.14 மணிக்கு இந்தியா வந்தடைந்துள்ளது என அரசுத்தரப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com