திருவள்ளூர்: பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவ, மாணவிகள் காயம்

திருவள்ளூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 மாணவ மாணவிகள் காயமடைந்தனர்.
விபத்து
விபத்து
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் மாணவ, மாணவிகளை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பட்டை மீறி தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையைவிட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 10 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். சாலையைக் கடக்க முயன்ற ஒரு தொழிலாளியும், வேன்  மோதியதில் காயமடைந்தார்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பள்ளி வேன் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், அரசு விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com