லாலாப்பேட்டை அருகே பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
லாலாப்பேட்டை அருகே பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
Published on

லாலாப்பேட்டை:

கரூர் மாவட்டம் லாலாப் பேட்டை அருகே மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்தவர் செந்தில் முருகன், கூலி தொழிலாளி. இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியின் மகள் அபிராமி (வயது 13), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி அபிராமிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தீரவில்லையாம். இந்த நிலையில் பொங்கல் விடுமுறையின் போதும் வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

விடுமுறை முடிந்தும் மாணவி அபிராமி வயிற்று வலியால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுமகாதானபுரத்தில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடலில் தீப்பற்றியதும், மாணவி கதறி அபய குரல் எழுப்பினார். இதனை கேட்ட அவரது தாய் வீட்டில் கிடந்த சாக்கு பையை மாணவியின் உடலில் போட்டு தீயை அணைத்தார். மேலும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி  வழக்குபதிவு செய்து,  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் மாணவி அபிராமி வயிற்றுவலியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com