கோவில்பட்டியில் பள்ளி மாணவர் மர்ம மரணம்

கோவில்பட்டியில் பிளஸ்- 2 மாணவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டியில் பள்ளி மாணவர் மர்ம மரணம்
Published on

கோவில்பட்டி:

எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி தெற்கு தெருவை சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது மகன் நிதீஷ்குமார் (வயது17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்துள்ளார். நேற்று இவர் தனது நண்பர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அவர் கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அருகே பிணமாக கிடந்தார். இதுபற்றி கோவில்பட்டி மேற்கு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மாணவர் நிதீஷ்குமார் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் அருகே வி‌ஷ பாட்டில் ஒன்றும் கிடந்தது. இதனால் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

நிதீஷ்குமார் பிணத்தை பார்த்து அவரது தாய் அழகம்மாள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. சுற்றி நின்ற அனைவரையும் கண் கலங்க செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com