கூடுதலாக வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்கள் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019 #SC #EVMs #VVPATcounting
கூடுதலாக வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்கள் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Published on

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை  தேர்தல்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சோதனை முயற்சியாக ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) அமைக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணும் அதேவேளையில் வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களில் உள்ள 50 சதவீதம் ஒப்புகை சீட்டையும் எண்ணக்கோரி திமுக, காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வி.வி.பாட் இயந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக ஊழியர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை. இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com