கேப் டவுன் டெஸ்ட்: 177 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்- சர்பிராஸ் அகமது 56 ரன்கள் சேர்ப்பு

கேப் டவுன் டெஸ்ட்: 177 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்- சர்பிராஸ் அகமது 56 ரன்கள் சேர்ப்பு

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. சர்பிராஸ் அகமது 56 ரன்கள் சேர்த்தார் #SAvPAK
Published on

அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இமாம்-உல்-ஹக் 8 ரன்னிலும், பகர் சமான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷான் மசூத் மட்டும் தாக்குப்பிடித்து விளையாட அசார் அலி 2 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 20 ரன்னிலும், பாபர ஆசம் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.


ஷான் மசூத்

இதனால் பாகிஸ்தான் 54 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் முதல்நாள் நாள் மதிய உணவு இடைவேளை பாகிஸ்தான் 25 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மசூத் 17 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஸ்டெயின், பிலாண்டர், ரபாடா, ஆலிவியர் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது இயலாத காரியம் என்று நினைத்த இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.


சர்பிராஸ் அகமது

ஷான் மசூத் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சர்பிராஸ் அகமது 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். முகமது அமிர் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க யாசிர் ஷா (5), முகமது அப்பாஸ் (0), ஷாஹீன் அப்ரிடி (3) அடுத்தடுத்து வெளியேற பாகிஸ்தான் 177 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

X

Maalai Malar
www.maalaimalar.com