

சாத்தூர்:
சாத்தூரில் 38 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
முதல்கட்டமாக கழிவுநீர் நீரேற்றும் ஷம்ப் கட்டும்பணிகள் நடந்து வருகிறது. பெரியார்நகர், சிதம்பரம் நகர், தில்லைநகர் பகுதிகளில் மேன்ஹோல் அமைக்கும் பணி, குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகளை சாத்தூர் எம்.எல்.ஏ. எதிர்கோட்டை சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பணிகள் நடைபெற வேண்டும் என்றும், ஒப்பந்த நிறுவன பொறுப்பாளரிடம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
முன்னாள் யூனியன் தலைவர் வேலாயுதம், நகர செயலாளர் வாசன், பேரவை நகர செயலாளர் முனீஸ், ராஜபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையா பாண்டியன், வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் சேதுராமானுஜம், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், முன்னாள் கவுன்சிலர் கே.பி.மணி.
கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் அழகர் சாமி, நத்தத்துப்பட்டி மணிகண்டன், நகராட்சி பொறியாளர் மணி, நகர மைப்பு அலுவலர் ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.