

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீதர் முதலில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பின் மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் சிறப்ப்பு எஸ்.ஐ. பால்துரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார்.
உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.