இந்தியாவிற்கு எதிராக படுதோல்வி: இலங்கை தேர்வுக்கு குழு கூண்டோடு பதவி விலகல்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை படுமோசமாக இழந்ததால், அந்த அணியின் தேர்வுக்குழு கூண்டோடு பதவி விலகியுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக படுதோல்வி: இலங்கை தேர்வுக்கு குழு கூண்டோடு பதவி விலகல்
Published on

தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி 3-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாத நிலையில் இலங்கை அணி உள்ளது. சொந்த மண்ணில் இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால் கடும் விமர்சனம் எழும்பியுள்ளது.

பல்லேகலேயில் நடைபெற்ற 3-வது போட்டியின்போது இலங்கை ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் சுமார் அரைமணி நேரம் தடைபட்டது.

இந்நிலையில் இலங்கை அணியின் மோசமாக செயல்பாடுக்கு பொறுப்பேற்று தேர்வுக்குழு தலைவராக இருக்கும் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை இலங்கை கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் மோகன் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com