அதிக டூயல் கேமரா ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் திட்டம்

ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இரட்டை கேமரா ஸ்மார்ட்போனினை வெளியிட்ட சாம்சங், இதைத் தொடர்ந்து பல்வேறு ஸ்மாரட்போனகளில் இரட்டை கேமரா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதிக டூயல் கேமரா ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் திட்டம்
Published on

புதுடெல்லி:

சாம்சங் நிறுவனம் டூயல் கேமரா அமைப்பு கொண்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இதைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி சி8 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விளம்பர படங்கள் வலைத்தளத்தில் காணப்படுகிறது. சாம்மொபைல் மூலம் வெளியாகியுள்ள படங்களில் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.  

சாம்மொபைல் வெளியிட்டுள்ள படங்களில் விரைவில் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படும் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி மற்றும் 5 எம்பி பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம். ஏற்கனவே வெளியான தகவல்களுடன் இதுவரை இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. 

கேமரா மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என்றும், இது ஹோம் பட்டனில் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அதிக நிறங்களுடன், கவர்ச்சிகரமான விளம்பர படங்களை சாம்சங் தயாரித்துள்ளதாக தெரிவதால், இளைஞர்களை கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் சாம்சங் கேலக்ஸி சி8 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களும் வெளியாகியுள்ளது, SM-C7100  என்ற பெயரில் வெளிவரும் சி8 ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி சி7 (2017) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி சி8 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1920x1080 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 2.39 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ P20 MT6757, 1.69 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி / 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி சி8 ஸ்மார்ட்போனில், 16 எம்பி செல்ஃபி கேமரா, 2560 எம்ஏஎச் பேட்டரி, 4ஜி எல்டிஇ, வோல்ட்இ, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com