பிரம்மாண்டமாக தயாராகும் சாம்சங் கேலக்ஸி நோட் 8

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரீமியம் ஸ்மார்ட்போனான நோட் 8 சார்ந்த புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள அம்சங்கள் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிரம்மாண்டமாக தயாராகும் சாம்சங் கேலக்ஸி நோட் 8
Published on

புதுடெல்லி:

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிவந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் தெளிவான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 

அந்த வகையில் இம்முறை கசிந்துள்ள தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது. புதிய புகைப்படங்களில் சாம்சங் சாதனத்தில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி நோட் 8 புதிய புகைப்படங்களில் 6.2 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே 18:5:9 என்ற விகிதம் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற டிஸ்ப்ளே எல்ஜி ஏற்கனவே தனது ஸ்மார்ட்போனில் வழங்கியுள்ளதோடு, ஆப்பிள் நிறுவனமும் தனது ஐபோன் 8 மாடலில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வசதி ஸ்மார்ட்போனினை ஒற்றை கையில் பயன்படுத்த உகந்ததாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே நோட் 8 ஸ்மார்ட்போன்களும் இரு மாடல்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்படலாம் என்றும் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. முன்னதாக வெளியான தகவல்களில் ஐரிஸ் ஸ்கேனர், பிக்ஸ்பி ஏ.ஐ. பட்டன் உள்ளிட்டவற்றுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் ஒரு மாடலிலும், மற்றொரு மாடலில் எக்சைனோஸ் 9810 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

கேலக்ஸி நோட் 8 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி வைடு ஆங்கிள் பிரைமரி கேமரா, 13 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 3X ஆப்டிக்கல் சூம் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்கவும் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படலாம். 

இத்துடன் நோட் 8 ஸ்மார்ட்போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கும் என்றும் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com