ரூ.5000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் ஜூன் மாதம் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம்.
ரூ.5000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்
Published on

புதுடெல்லி:

சாம்சங் நிறுவனம் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்த கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. உயர் ரக ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான S8 பிளஸ் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் இந்தியாவில் ரூ.74,900 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், மிட்-நைட் பிளாக் நிற கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் ரூ.5,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.65,900 விலையில் சாம்சங் இ-ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு சார்ந்த தகவல்கள் மும்பையை சேர்ந்த விற்பனையாளர் டுவிட்டர் மூலம் பதிவிட்டிருந்தார். 

கேலக்ஸி S8 பிளஸ் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் தற்சமயம் ரூ.64,900 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய விலைகுறைப்பு குறைந்த கால சலுகை என்றே கூறப்படுகிறது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் 64-பிட் எக்சைனோஸ் 8895 ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எல்கெட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் டூயல் சிம் சப்போர்ட், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, வைபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், கைரேகை ஸ்கேனர், பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 3500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com