சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.79 லட்சம் காணிக்கை

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இங்கு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை ரூ.79 லட்சம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.79 லட்சம் காணிக்கை
Published on

திருச்சி:

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இங்கு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இரு முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் குமரதுரை, கோவில் மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

இதில் காணிக்கையாக 79 லட்சத்து 26 ஆயிரத்து 870 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 564 கிராம் தங்கமும், 11 கிலோ 80 கிராம் வெள்ளியும், மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஓமன், கத்தார், யூரோ, குவைத், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளில் உள்ள பணம் 97-ம் கிடைத்துள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருச்சி ஐயப்பா சேவா சங்கம், அம்மன் அருள், ஆத்ம சங்கம் ஆகியவற்றை சேர்ந்த தன்னார்வலர்களும், தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com