உ.பி.யில் சட்டசபை நோக்கி சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லக்னோவில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபை நோக்கி பேரணி நடத்தினர்.
சைக்கிள் பேரணி
சைக்கிள் பேரணி
Published on

லக்னோ:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக பாஜக சார்பில், சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். 

இந்நிலையில், பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் இன்று சைக்கிள் பேரணி நடத்தினர். 

லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணியை, கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார். சட்டசபை வரை இந்த பேரணி நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com