படவேட்டில் கூட்டுறவு சங்க செயலாளரை கத்தியால் வெட்டிய சேல்ஸ்மேன்

சம்பளத்தை நிறுத்தி வைத்ததால் கூட்டுறவு சங்க செயலாளரை சேல்ஸ்மேன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
படவேட்டில் கூட்டுறவு சங்க செயலாளரை கத்தியால் வெட்டிய சேல்ஸ்மேன்
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு வாழியூரில் உள்ள ரேசன் கடையின் விற்பனையாளராக கோவிந்தசாமி (வயது 54). என்பவர் பணியாற்றி வருகிறார். படவேடு வீரக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (53). இவர் படவேடு வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளராக உள்ளார்.

இந்த கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் தான் கோவிந்தசாமி சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். கோவிந்தசாமி அங்கு ஏற்கனவே உர விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது பணம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு பணம் செலுத்தி வந்தார். தற்போது பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் செயலாளர் சகாதேவன் அவருக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தார். இதனால் கோவிந்தசாமி சகாதேவன் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத் திற்கு கோவிந்தசாமி வந்தார். அப்போது அங்கிருந்த செயலாளர் சகாதேவனிடம் சம்பளம் கேட்டு தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி சகாதேவனை கத்தியால் வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த சகாதேவனை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சந்தவாசல் போலீசார் சேல்ஸ்மேன் கோவிந்தசாமியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com