சேலத்தில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோர காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று சாலையோர காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கன்னியம்மாள் தலைமை தாங்கினார். 

சாலையோர பெண் வியாபாரிகளை தரக்குறைவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com