சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஆண் பிணம்

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஆண் பிணம்
Published on

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையம் சென்டர்பிட் அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலை பள்ளப்பட்டி போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

பிரவுன் நிற வெள்ளை கட்டம் போட்ட சட்டை, நீலம்- வெள்ளை கலந்த கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். எனவே பொதுமக்கள் யாருக்காவது இவரை பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படி பள்ளப்பட்டி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com