

முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒட்டுமொத்த போட்டிக்கும் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இரண்டு போட்டிக்கான டெஸ்ட் அணியில் சகா மாற்று வீரராக உள்ளார்.
இந்நிலையில் 2-வது போட்டியில் சகா விக்கெட் கீப்பராக பணியாற்ற தகுதியானவர் என முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிர்மானி கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளார். அவர் கடவுள் கொடுத்த வரம். ஆனால் அவர் இன்னும் அதிக அளவில் கற்றுக் கொள்ள வேண்டும். விக்கெட் கீப்பர் பணி என்பது மிகவும் கடினமான பணி. ஒவ்வொருவரும் கையுறை அணிந்து கொண்டு கீப்பராக பணியாற்றிட முடியாது’’ என்றார்.