விருப்ப ஓய்வு கோரிய சகாயம் ஐ.ஏ.எஸ். அரசு பணியிலிருந்து விடுவிப்பு

அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்திருந்த நிலையில், இன்று அரசு பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். விடுவிக்கப்பட்டார்.
சகாயம் ஐ,ஏ.எஸ்.
சகாயம் ஐ,ஏ.எஸ்.
Published on

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகள் இருந்த நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ்.

கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதியே விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்திருந்த போதும், அது தொடர்பாக முடிவு எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தோடு அவருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இனியும் அவர் பணியில் நீடிக்க விரும்பவில்லை என அப்போது சகாயம் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

கிரானைட் முறைகேடு விவகாரத்தில் சிறப்பான வகையில் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தவர். இதனால் மக்களிடையே சிறந்த அதிகாரி என்ற பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com