விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார்.
சகாயம் ஐஏஎஸ்
சகாயம் ஐஏஎஸ்
Published on

சென்னை:

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 6 வருடமாக பதவி வகித்து வரும் நிலையில் விஆர்எஸ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார்.

முக்கியமில்லாத ஒரே பதவியில் பல ஆண்டுகளாக தமிழக அரசு வைத்திருப்பதால் சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. விஆர்எஸ்க்கு விண்ணப்பித்த சகாயம் 2 மாதங்களில் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

சகாயம் ஐ.ஏ.எஸ். மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வருகிறார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் சகாயம் ஐ.ஏ.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com