கணவரை விவாகரத்து செய்தபின், வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட பெண்

தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, 7 வயதில் இருந்து வளர்த்து வந்த வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட ரஷிய பெண், கர்ப்பிணியாக உள்ளார்.
வளர்ப்பு மகனை திருமணம் செய்த மரினா
வளர்ப்பு மகனை திருமணம் செய்த மரினா
Published on

ரஷியாவைச் சேர்ந்த பெண் மரினா பால்மாஷேவா. இவரை இன்ஸ்டாகிராமில் 4,20,000 பேர் பின்தொடர்கிறார்கள். கடந்த மே மாதம் 7 வயது சிறுவனுடன் இருக்கும் படத்தையும், அதன்பின் 20 வயதாகிய அந்த பையனை கட்டிப்பிடித்து நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இந்த படத்திற்கு ஆதரவான கருத்து வரும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் எதிர்மறையான கருத்துகளே வந்தன. என்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கடந்த வாரம் அந்த வாலிபரை திருமணம் செய்துள்ளார்.

பின்னர் தனது இன்ஸ்டாகிராமில் வாலிபர் தனது வளர்ப்புப் பையன் என்று தெரிவித்துள்ளார். இது இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது 35 வயதாகும் மரினா 2007-ம் ஆண்டு தனது 22 வயதில் அலெக்சி என்பவரை திருமணம் செய்துள்ளார். அலெக்சிக்கு ஐந்து மகன்கள். அதில் 2-வது மகன்தான் விலாடிமிர் ஷவ்ரின். அப்போது விலாடிமிர்-க்கு வயது 7. 10 ஆண்டுகளுக்குப்பின் அலெக்சியிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டார்.

பின்னர் மரினா விலாடிமிர் மற்றும் அவனது சகோதரர்கள் மூன்று பேருடன் வசித்து வந்தார். இந்நிலையில்தான் விலாடிமிர் மீது மரினாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விலாமிரிடம் தெரிவிக்க அவனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

விலாடிமிர் உடன் இணைந்து குழந்தை பெற்றெடுக்க மரியான விரும்பினார். மரினா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அருகில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகம் சென்று திருமணம் செய்துள்ளனர். விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘‘திருமணம் முடிந்த பிறகு திருமண ஆடை அணிந்து சந்தோசமாக அருகில் உள்ள ரெஸ்டாரன்டில் விருந்தினர்களுடன் வரவேற்பை கொண்டாடினோம். தற்போது நாங்கள் குழந்தையை எதிர்பார்த்துக் கெண்டிருக்கிறோம். இதைவிட பெரிய நகரத்திற்கு செல்ல விரும்புகிறோம். முன்னாள் கணவரிடம் நாங்கள் பேசுவதில்லை. நாங்கள் திருமணம் செய்ததை அவர் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.

வாழ்க்கை எப்படி திரும்பும் என்று உங்களுக்கு தெரியாது. ஒரு நபரை சந்திக்கும்போது, உங்களை மகிழ்ச்சியுடைவராக உருவாக்கும். சிலர் எதிர்ப்பார்கள். சில ஆதரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நாங்கள் மிகிழ்ச்சியாக இருக்கிறோம். நீங்களும் மகிழ்ச்சிய இருக்க விரும்புகிறேன்’’ மரினா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com