பூ வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் - பறக்கும்படை சோதனையில் சிக்கியது

மேலூர் அருகே பூ வியாபாரி உரிய ஆவணமின்றி கொண்டு வந்ததாக அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பூ வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் - பறக்கும்படை சோதனையில் சிக்கியது
Published on

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கீழையூர் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து ஆவணங்களை கேட்டனர். அதற்கு மோட் டார் சைக்கிளில் வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர் கொண்டு வந்த பையை சோதனையிட்ட போது அதில் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதை யடுத்து அதிகாரிகள் பண த்தை பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில், பணம் கொண்டு வந்தவர் மதுரை புதூரைச் சேர்ந்த பூ வியாபாரி சுல் தான் அலாவுதீன் என தெரியவந்தது. வியாபாரத் துக்காக பணத்தை கொண்டு செல்வதாக அவர் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மேலூர் தாசில்தார் சிவசாமிநாதன் முன்னிலை யில் இரவோடு இரவாக மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com