கோவையில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2.45 லட்சம் பறிமுதல்

கோவையில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ. 2லட்சத்து 45 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவையில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2.45 லட்சம் பறிமுதல்
Published on

கோவை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை அதிகாரி ராகவன் தலைமையில் அதிகாரிகள் சுகுணாபுரம் சோதனை சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த கே.கே.புதூரை சேர்ந்த தீபக்கிடம் (25) விசாரித்தனர். அப்போது அவர் வியாபார ரீதியாக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.இதேபோல் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை அதிகாரி சதிஷ் குமார் தலைமையில் கோவை புதூரில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு கார் வந்தது. அதனை நேரு நகரை சேர்ந்த மாதவன் ஓட்டி வந்தார். காரை சோதனை செய்த போது அதில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது.

அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணம் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com