கஞ்சா விற்பவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு

கஞ்சா விற்பவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1000 பரிசளிக்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் பழனி போலீசார் அறிவித்துள்ளனர்.
ஆயிரம் ரூபாய்
ஆயிரம் ரூபாய்
Published on

நெய்க்காரப்பட்டி:

பழனி, நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, கோதைமங்கலம், பாலசமுத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகம் உள்ளது. இதையடுத்து பழனி தாலுகா போலீசார் கஞ்சா விற்பவர்களை பிடித்து கைது செய்து வருகின்றனர். எனினும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே இதை தடுக்க போலீசார் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கஞ்சா விற்பவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1000 பரிசளிக்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com