தாராபுரம் வணிக வளாகத்தில் திருடிய ஊழியர் கைது

தாராபுரம் வணிக வளாகத்தில் திருடிய ஊழியர் மதுரையில் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம் வணிக வளாகத்தில் திருடிய ஊழியர் கைது
Published on

தாராபுரம்:

தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் மதுரை பங்கஜம் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 25) என்பவர் ஊழியராக வலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு வணிக வளாக காவலாளியை அழைத்து தனக்கு இன்று பிறந்த நாள். நண்பர்களுக்கு மது விருந்து அளிக்க வேண்டும். மதுவாங்கி வாருங்கள் என்று பணம் கொடுத்து அனுப்பினார்.

காவலாளி மதுவாங்க சென்றிருந்தபோது சதீஷ்குமார் கடையில் இருந்து விலை உயர்ந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தப்பினார். திரும்பி வந்து பார்த்த காவலாளி கடையில் சதீஷ்குமார் மாயமானது குறித்தும், பொருட்கள் சிதறி கிடப்பதை அறிந்தும் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து பொது மேலாளர் கண்ணன் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது ஊழியர் சதீஷ்குமார் பொருட்களை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.

இது குறித்து அவர் தாராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையில் தலைமறைவாக இருந்த சரவணனை நேற்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com