பொன்னேரி அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

பொன்னேரி அருகே ஒரேநாளில் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி மற்றும் 4 கடைகளுக்குள் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம் மையம்
கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம் மையம்
Published on

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டில் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்மகும்பல் ஏ.டி.எம் மையத்துக்குள் புகுந்து கண்காணிப்பு கேமராவை உடைத்தனர்.

பின்னர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்றனர். லாக்கரை திறக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதேபோல் அதே பகுதியில் உள்ள குமரன் என்பவரின் மளிகை கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பொருட்களை அள்ளி சென்றுவிட்டனர்.

மேலும் அருகில் இருந்த ஜெராக்ஸ் கடை, செல்போன் விற்பனை கடை, பேக்கரி கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்தும் புகுந்துள்ளனர்.

ஒரேநாளில் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி மற்றும் 4 கடைகளுக்குள் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com