ராணிப்பேட்டையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மகாராஷ்டிரா மாநிலம், தாராவி பகுதியில் அம்பேத்கர் வாழ்ந்த வீடு சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை, முத்துக்கடை பகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

சிப்காட்(ராணிப்பேட்டை):

மகாராஷ்டிரா மாநிலம், தாராவி பகுதியில் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு சில சமூக விரோதிகள் சேதப்படுத்தினார்கள். இதை கண்டித்து ராணிப்பேட்டை, முத்துக்கடை பகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் சிவகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன், மாநில அமைப்பு செயலாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் அனந்தலை தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அம்பேத்கர் வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com