கல்லூரி மாணவி அஸ்வினி கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன?

சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Chennai #Ashwini
கல்லூரி மாணவி அஸ்வினி கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன?
Published on

சென்னை:

சென்னை கே.கே நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த அஸ்வினி என்ற மாணவி இன்று பிற்பகலில் கல்லூரி வாசலில் வைத்து வாலிபரால் கத்தியால் குத்தப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அஸ்வினியை அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அஸ்வினியை கத்தியால் குத்திய நபரை அங்குள்ளவர்கள் அடித்து, உடைத்து கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

அழகேசன்

கொலை செய்த நபர் மதுரவாயலைச் சேர்ந்த அழகேசன் (28) என்பது தெரியவந்துள்ளது. சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் அழகேசன் தொல்லை கொடுப்பதாக அஸ்வினி அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே அவர் மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அழகேசன் தொல்லையிலிருந்து தப்பிக்க அஷ்வினி ஜாபர்கான் பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் அனைத்து மாணவ, மாணவிகளை உடனடியாக வெளியேற்றியது. #Chennai #Ashwini 

X

Maalai Malar
www.maalaimalar.com